கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற  தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த அருண்பிரசாத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில்,நேற்று அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் சுமார் வைத்தியசாலையில்,  47 நாட்களாக தொடர்ச்சியாக சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். மட்டக்களப்பு இருதயபுரத்தினைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞரான செ.அருண்பிரசாத் (வயது-30) வெல்டிங் கடை உரிமையாளராவார்.