இன­வா­தி­க­ளி­ட­மி­ருந்து முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

இன­வா­தி­க­ளி­ட­மி­ருந்து முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காக்கும் வகையில்  ஐக்­கிய தேசிய முன்­னணி அரசில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சு, இரா­ஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பத­வி­களை வகித்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சக­லரும் அந்தப் பத­வி­களை கூட்­டாக இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர்.

இது தொடர்­பாக தனது டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரி­விக்­கும்­போதே கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

“முஸ்லிம் அமைச்­சர்கள் இன­வா­தத்­துக்கு இரை­யா­னது வருந்­தத்­தக்­கது. நேற்று நாம், இன்று நீங்கள், நாளை மற்­றவர். நாம் முஸ்லிம் மக்­க­ளோடு தொடர்ந்தும் தோழ­மை­யோடு நிற்போம். நேர்ச் சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் இதையே செய்யுமாறு அழைக்கின்றோம்  என்றார்.