யாழ்ப்பாணத்தில் இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய 4 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 4 பேர் சந்தேக்கத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளனர்.

இதன்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த நபர்களை விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.இதனால் நான்கு இளைஞனர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள்  நல்லூர், நாவாந்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.