இந்­தோ­னே­சிய பாலித்தீவி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லிய சிட்னி நக­ருக்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பய­ணித்த  விமா­ன­மொன்றின் மல­ச­ல­கூ­டத்­திற்குள்  பெண்­ணொ­ருவர் பிர­வே­சித்து உட்­பு­ற­மாக தாளிட்டுக் கொண்டு வெளியேற மறுத்­ததால்  பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில விமா­னத்­தி­லி­ருந்த விமான ஊழி­யர்கள்  மல­ச­ல­கூட கதவைத் தொடர்ந்து தட்டி அந்த பெண்ணை வெளியேற வலி­யு­றுத்­திய போதும் அந்தப் பெண் மல­ச­ல­கூ­டத்தை விட்டு வெளி­யேற மறுத்­துள்ளார்.

இதனால் அந்தப் பெண் மல­ச­ல­கூடத்தில் இருக்­கவே விமா னம் சிட்னி நகர விமான நிலை­யத்தில்  தரை­யி­றங்­கி­யுள்­ளது.  

இத­னை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த ஆண்  பணி­யாளர் ஒருவர் அந்த மல­ச­ல­கூ­டத்தின் கதவை உடைத்து திறந்துள் ளார். இதனால் சினமடைந்த அந்தப்  பெண்  தகாத வார்த்­தை­க ளால் திட்டி கூச்­ச­லிட்டு குழப்பம் விளை­வித்­துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த பொலிஸாரால் அப்பெண் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.