ஈராக்கில் மேலும் இரண்டு பிரான்ஸ் பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜிகாத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருந்த இரண்டு பிரான்ஸ் பிரஜைகளுக்கே நேற்று திங்கட்கிழமை பக்தாத்திலுள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

32 வயதுடைய பயங்கரவாதிக்கும்,  41 வயதான இன்னுமொரு பயங்கரவாதிக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மொத்தமாக 9 பயங்கரவாதிகளுக்கு பக்தாத் நகர நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியிருந்தது. நேற்று மேலும் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் மொத்தமாக 11 பேருக்கு இதுவரை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியாக மரணதண்டனை விதிக்கப்பட்டு வருவது பிரான்ஸ் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.