சித்தார்த், ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாரான ‘சிவப்பு மஞ்சள் பச்சை ’படத்தின் ஒடியோ தனியார் பண்பலையில் வெளியானது.
‘பிச்சைக்காரன் ’படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சசியின் இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற பெயரில் படமொன்று தயாரானது. இந்தப் படத்தில் சித்தார்த். ஜீ. வி, பிரகாஷ் குமார் ,மலையாள நடிகை லிஜிமோள் ஜோஸ், நடிகை தீபா ராமானுஜம், நடிகை காஷ்மிரா பரதேசி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார்.
அறிமுக இசை அமைப்பாளர் சித்து குமார் இசையில் தயாரான இப்படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று சென்னையில் உள்ள தனியார் பண்பலையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் சசி, கதையின் நாயகர்கள் ஜீ. வி பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த், இசையமைப்பாளர் சித்து எஸ் குமார் ஆகியோர் பங்குபற்றினர்.
இயக்குனர் சசி தெரிவிக்கையில்,
போக்குவரத்து காவலராகபணி புரியும் ஒருவரது வாழ்க்கை வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களும், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர் ஒருவரின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களும், வீதி என்ற ஒரு புள்ளியில், சிவப்பு மஞ்சள் பச்சை என்ற குறியீட்டு சந்தித்தால் என்ன நடைபெறும் என்பதே படத்தின் திரைக்கதை. எக்சன் என்டர்டைன்மென்ட் திரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் மூலம் சித்து எஸ் குமார் என்பவரை இசை அமைப்பாளராக அறிமுகப் படுத்துகிறேன்.” என்றார்.
இதனிடையே இயக்குனர் சசி, விஜய் அண்டனி மற்றும் எஸ் .எஸ். குமரன் போன்ற இசை அமைப்பாளர்களை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM