மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - காட்மோர் பிரதான வீதியில் மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி டீசைட் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 4 பேர் காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)