இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவிடம் ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணி உலக கோப்பை தொடரின் தனது முதல் ஆட்டத்தில் நாளை தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு நேற்று ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அதிகாரிகள் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தினர். 

ஜஸ்பிரித் பும்ராவிடம் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்சுற்றுச் சோதனையில் பும்ராவின் சிறுநீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது, அடுத்த 45 நிமிடங்களுக்குப்பின் பும்ராவின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. 

இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஊக்கமருந்து சோதனை செய்ததால் பும்ரா சற்று பதற்றத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.