அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதி கிம் சொல் கொலை செய்யப்படவில்லை  சிறைவைக்கப்பட்டுள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகளிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தனது விசேட பிரதிநிதியை  சுட்டுக்கொலை செய்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவருடன் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர், விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

எனினும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் தோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தைகளில் அவரது பங்களிப்பு குறித்து விசாரணையை எதிர்கொண்டுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் கடுழிய சிறைத்தண்டனையை  அனுபவிக்கவில்லை என சிஎன்என குறிப்பிட்டுள்ளது.