நாடு முழு­வதும் வெயில் மற்றும் அனல் காற்று கார­ண­மாக 3 ஆண்­டு­களில் 4,200 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நாடு முழு­வதும் பல்­வேறு மாநி­லங்கள் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து அனல் காற்று வீசி­வ­ரு­கின்­றது. இதனால் உயி­ரி­ழப்­பு­களும் ஏற்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் புள்ளி விபரம் ஒன்று கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கோடை காலத்தில் 4,200 பேர் வெயில் தாக­த்­தினால் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கி­றது.

தற்­போது ஆந்­திரா, தெலுங்­கானா, ஒடிசா,மத்­தி­யப்­பி­ர­தேசம், மராட்­டியம், ராஜஸ் தான், கர்­நா­டகம் ஆகிய மாநி­லங்­களில் இயல்­பைக்­காட்­டிலும் வெப்பம் அதி­க­ரித்­துள்­ளது.

ஆந்­தி­ரா–­தெ­லுங்­கானா மாநி­லங்­களில் நேற்று முன்­தினம் ஒரே நாளில் மாத்­திரம் 96 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அதி­க­பட்­ச­மாக கடப்பா மாவட்­டத்தில் 113 டிகிரி வெப்பம் பதி­வா­னது. இங்கு வெயில் கொடுமை தாங்­காமல் 10 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். தெலுங்­கா­னாவில் நல்­கொண்டா மாவட்­டத்தில் 12 பேர் உயி­ரி­ழந்­தனர்.

ஜன­வரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை­யி­லான கால கட்­டத்தில் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்­களில் உச்­ச­கட்­டத்தை எட்­டு­கி­றது. ஏப்ரல், மே மாதங்­க­ளில்தான் உயி­ரி­ழப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன.

இதே­வேளை, வட­மா­நி­லங்­களில் குளி­ருக்கு பலி­யா­ன­வர்­க­ளுக்கு மத்­திய அரசு நிதி உதவி வழங்­கு­கி­றது. அதுபோல் வெயி­லுக்கு பலி­யா­ன­வர்­க­ளுக்கும் மத்­திய அரசு ரூ.1½ லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கிருஷ்ண மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள் ளமை குறிப்பிடத்தக்கது.