112 வரு­டங்­க­ளுக்கு முன்னர்  நப­ரொ­ரு­வரால்  எழுதி அனுப்பப்பட்ட தபால் அட்­டையை   தபால் சேவை  மூலம்  பெற்று  பெண்­ணொ­ருவர் அதிர்ச்­சிக்­குள்­ளான சம்­பவம் பிரித்தானியாவில் இடம்­பெற்­றுள்­ளது.

டெவொன் பிராந்­தி­யத்தில் பிளை­மவுத் எனும் இடத்தில் வசிக்கும் மிசேலா வெப்பர் என்ற 24 வயது பெண் சம்­பவ தினம்  தனது கணவ­ருடன் இணைந்து தமக்கு விநி­யோ­கிக்­கப்­பட்ட கடி­தங்­களை  பார்­வை­யிட்டபோதே அவற்றின் மத்­தியில் தமது வீட்டு முகவரியிடப்­பட்டு அனுப்­பப்­பட்­டி­ருந்த குறிப்­பிட்ட  தபால் அட்டையைக்கண்டு அவர் திகைப்­ப­டைந்­துள்ளார்.

 அந்தத் தபால் அட்டை  மிசே­லோவின் வீட்டில் முன்­னொரு சமயம் வாழ்ந்த திரு­மதி வில்ட்­ஷி­ய­ருக்கு 1907 ஆம் ஆண்டில்  நத்தார் தினத்­துக்கு முதல் நாள் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. 

வில்ட்­ஷியர் 1990 ஆம் ஆண்டு சவு­தாம்டன் பிராந்­தி­யத்தில் மரணமா­கி­யி­ருந்தார். மிசேலோ அந்த வீட்டில்  2014 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வரு­கிறார்.

இந்­நி­லையில் தற்­போது மிசேலா வில்ட்­ஷி­யரின் குடும்பத்தினரைக் கண்­டு­பி­டித்து அவர்­க­ளிடம் தனக்குக் கிடைத்த தபால் அட்­டையை கைய­ளிக்கத் திட்­ட­மிட்­டுள் ளார்.