இந்தியாவின் இமய மலைத்தொடரில் ஏறச் சென்ற போது காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் தற்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த 8 பேரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த தகவலை உறுதிசெய்துள்ளனர்.

குறித்த காணாமல் போன குழுவினரில் 4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கிய இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவர்களை தேடும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.