யாழ்.பருத்தித்துறை பகுதியில் மரண சடங்கில் மூல வெடி கொளுத்தியவரின் ஒரு கைமணிக்கட்டும், ஒரு கண்ணையும் இழந்துள்ளார். 

பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த யோகராஜா ராஜஜோதி (வயது 33) என்பவரே கையும், கண்ணையும் இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மரண சடங்கின் போது , பூதவுடலை எடுத்து செல்லும் போது வெடிகள் கொளுத்தப்பட்டன. அதன் போது குறித்த நபர் மூல வெடிகள் சிலவற்றை ஒன்றாக இணைத்து கொளுத்திய போது அது கைகளுக்குள் வெடித்துள்ளது. அதனால் அவர் படுகாயமடைந்தார். 

படுகாயமடைந்த நபரை அங்கிருத்தவர்கள் மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு சிகிச்சையின் ஒரு கை மணிக்கட்டின் கீழ் சிதவடைந்தமையால் அதனை வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றினார்கள். அத்துடன் இரு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதில் ஒற்றைக் கண் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் , கண்ணுக்கான சிகிச்சைகளை தொடர்ந்து வழங்கி வருவதாக வைத்திய தரப்புக்கள் தெரிவித்தன.