தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்­க­ளையும் புலி­களும் பிடித்துச் சென்­றனர். இன்று மூன்று பிள்­ளை­க­ளையும் இழந்து மன­நலம் பாதிக்­கப்­பட்­டவள் போல் இருக்­கின்றேன் என பூந­கரி பள்­ளிக்­கு­டாவைச் சேர்ந்த சோம­சுந்­தரம் ஜெய­மேரி எனும் தாய் கண்­ணீ­ருடன் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் இறு­திநாள் அமர்வு நேற்று வியா­ழக்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் பளை மற்றும் பூந­கரி பிர­தேச செய­லக பிரி­வு­களை சேர்ந்­த­வர்­க­ளுக்­காக இடம்­பெற்­றது. இதன்போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் தனது சாட்­சி­யத்தில்,

1978 ஆம் ஆண்டு பிறந்த எனது மூத்த மகன் 2004 ஆம் ஆண்டு மட்­ட­க்க­ளப்பு குருக்­கள்­மடம் பகு­தியில் வைத்து கருணா குழுவால் பிடித்துச் செல்­லப்­பட்டார். இவர் பின்னர் இயக்­கத்தில் இருக்கும் போது இறந்து விட்டார்.

பின்னர் 1986 ஆம் ஆண்டு பிறந்த இரண்­டா­வது மகன் சோம­சுந்­தரம் இரு­த­ய­ராசா 2008-–2-–6 அன்று புலி­களால் பிடித்­துச்­செல்­லப்­பட்டார் இன்றுவரை எந்த தக­வலும் இல்லை.

இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு பிறந்த எனது மூன்­றா­வது மகனை 2009- ஆம் ஆண்டு 2-8 ஆம் திகதி புலிகள் கட்­டாய ஆட்­சேர்ப்பில் பிடித்துச் சென்­றனர். அவர் தொடர்­பிலும் எந்த தக­வலும் இல்லை. என கண்­ணீ­ருடன் தெரி­வித்த ஜெய­மேரி, புலி­களால் பிடிக்­கப்­பட்ட எனது இரண்டு பிள்­ளை­களில் ஒரு மகனை மாத்­தளன் கடற்­க­ரையில் எனது ஊர­வர்கள் கண்­டுள்­ளனர். அதில் ஒரு மகன் மாத்­தளன் பகு­தியில் இருந்து சாலை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த­தாக கண்­ட­வர்கள் சொன்­னார்கள் என்றும் தெரி­வித்தார்.

எனது மூன்று ஆண் பிள்­ளை­களும் இல்­லாமல் நான் பெரிதும் கஷ்­டப்­ப­டு­கின்றேன், அவர்­களை நினைத்து நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதற் காக சிகிச்சையும் பெறுகின்றேன் எனப் பையிலிருந்த குளிசைகளையும் எடுத்து காட்டினார்.