(ஆர்.யசி, எம்.எப்.எம்.பஸீர் )

விசாரணைகளுக்கு அமைச்சுப் பதவிகள் தடையாக இருக்குமென கருதினால் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிலைமைகளை உணர்ந்து சுயாதீனமாக முடிவெடுங்கள். உங்களின் தீர்மானத்தில் எனது தலையீடு இருக்காது என பிரதமர ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.  

அத்துடன் அரசாங்கத்தில் பின்வரிசை உறுப்பினர்களாக இருந்து செயற்படுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் அவர்கள் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் இன்று காலையில் கூடி ஆராய்ந்ததுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது நிலைப்பாட்டினை தெரிவித்தனர். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.