(நா.தினுஷா) 

தொடர் குண்டுத்தாக்கதல் சம்பவங்களினால் ஊணமுற்ற மற்றும்  அனாதையான குழந்தைகளுக்குக்கென விசேட நிதியமொன்றை அரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நாளைய அமைச்சரவை  கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளார்.  

அதேபோன்று இந்த குண்டுத்தாக்குதல் சம்பவங்களினால்  ஊணமற்றவர்களுக்கு வெளிநாட்டு சிகிச்சைக்கான செலவை  முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதோடு  பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட தேவைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளது.