கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ‘அருவி’ படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதுடன் தனது நண்பர்களுடன் இணைந்து, நண்பர்களுக்கு உதவி புரிவதற்காக சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். 

அந்நிறுவனத்தின் சார்பில் முதன்முதலாக தனது நண்பரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜாவை ‘கனா ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் ஒடியோ வெளியீட்டின்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த வகையில் யூடியூப் இணையதளத்தில் பிரபலமாக வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பபளிக்கும் விதமாக ‘பிளேக் ஷீப்’ என்ற பெயரில் இணையத்தில் பிரபலமானவர்கள் இளங்கலைஞர்களுடன் இணைந்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ஒடியோ வெளியீட்டின்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில் அருவி மற்றும் யாழ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அடுத்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

இதனால் நடிகர் சிவகார்த்திகேயன், வெற்றிக்கரமான தயாரிப்பாளராகவும் வலம் வருவதற்கு தன்னை அர்ப்பணித்து வருகிறார் என்று அவருடைய ரசிகர்களும், திரையுலகினர்களும் பாராட்டுகிறார்கள்.