(தி.சோபிதன்)

வடக்கு கிழக்கு தமி­ழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் சரி­யான தீர்­மானம் எடுத்­தி­ருந்தால் எமக்கு இவ்­வ­ளவு இழப்­புக்கள் வந்­தி­ருக்­காது. எனவே இனி­யா­வது தமி­ழர்கள் தங்­க­ளுக்கு பொருத்­த­மான தேசியத் தலை­வரை எதிர்­வரும் தேர்தல் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் யாழ்.மாநகர சபை மைதானத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று நடை­பெற்ற சமுர்த்தி நிவா­ரண உரித்து பத்­திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இந்த நாட்டில் உள்­நாட்டு போரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வாத தாக்­குதல் வரை தமிழ் மக்­களே கொல்­லப்­பட்டு வரு­கின்­றனர். இலங்­கையில் எத்­த­னையோ சமூகம் வாழ்­கின்ற போதிலும் இன்­று­வரை தமி­ழர்­களே பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.நாட்டில் இடம்­பெற்ற போரினால் தமி­ழர்கள் உட­மை­களை இழந்­தனர். அதற்கு மேலாக பல உற­வு­களை இழந்­து­ள்­ளனர்.

தமி­ழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்­தலின் போது சில நிர்ப்­பந்­தத்­தினால் வாக்­க­ளிக்­காது விட்­டனர்.இதனால் ஐக்­கிய தேசியக் கட்சி பின்­ன­டைவை சந்­தித்­தது.இதனால் நாட்டில் உள்­நாட்டு போர்  உக்­கிரம் அடைந்­தது. முள்­ளி­வாய்க்கால் இறுதி போரில் ஏரா­ள­மான மக்கள் கொல்­லப்­பட்­டனர். இதேவர­லாற்று தவ­றினை இனியும் தமிழ் மக்கள் செய்யக் கூடாது. எனவே இனி வரும் தேர்தலில் சரியான தெரிவினை மேற்கொண்டு முழுநாட்டுக்குமான தேசிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண் டும் என்றார்.--