சிரியாவில் கார் குண்டுத் தாக்குதல் - 4 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

Published By: R. Kalaichelvan

03 Jun, 2019 | 11:42 AM
image

சிரியாவின் பரபரப்பான சந்தை மற்றும் மசூதி அருகில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

சிரியாவில் ரம்ஜான் பண்டிகைக்கான ஆயத்த நடவடிக்கைகைளில் மக்கள் ஈடுட்டிருந்த நிலையில் அங்குள்ள பிரபல வணிக வளாகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் சன நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது.

இந்நிலையில்,அலெப்போ மாகாணத்தில் உள்ள அஜாஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மாலை நோன்பு திறந்துவிட்டு, தொழுகைக்கு பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்த போது, அதற்கு அருகாமையில் உள்ள சந்தைப் பகுதியில் ஏராளமானவர்கள் புது ஆடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர்.

அப்போது அங்கு பெரும் சத்தத்துடன்  காரொன்று வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 குழந்தைகள் உட்பட 17 பேர் உடல் சிதறி பலியாகினர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டடோர் அருகிலுள்ள வைதை்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதால் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52