என்­ மீது சுமத்­தப்­பட்­டுள்ள பத்து குற்­றச்­சாட்­டுக்களும் எந்­த­ வி­த­மான அடிப்­ப­டை­களும் அற்­றவை. இது நியா­யத்­துக்கும் இன­வா­தத்­துக்கும் இடை­யி­லான போட்டி. இதில் எது வெல்­கி­றது என்று பார்ப்போம். இந்தப் பதவி பகட்டு எல்லாம் எங்­க­ளுக்கு தூசு. ஆனால் யாரோ சொல்­கி­றார்கள் என்று ஓட நாங்கள் தயா­ரில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது குறித்து கேட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது, என்­னிடம் ஜனா­தி­ப­தியோ அல்­லது வேறு யாருமோ அழுத்­தங்கள் வழங்­க­வில்லை. பதவி விலகும் அள­வுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்­கிறேன். என்­மீது வைக்­கப்­பட்­டுள்ள பத்து குற்­றச்­சாட்­டுக்கள் எந்த அடிப்­ப­டையும் அற்­றவை. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நியா­யத்­துக்கும் இன­வா­தத்­துக்கும் இடை­யி­லான போட்டி. அதில் எது வெல்­கி­றது என்று பார்ப்போம்.

இன்று எனது சமூ­கத்தின் மீது அடக்­கு­முறை மேற்­கொள்­ளப்­படும் போது  என்­மீது வன்­மங்கள் பிர­யோ­கிக்­கப்­படும் போது இந்தப் பதவி பட்­டங்கள் எங்­க­ளுக்கு பெரி­தல்ல. அதை­தூக்கி வீசி­விட்டு செல்­வதும் எங்­க­ளுக்கு பெரி­தல்ல.  ஆனால் யாரோ சொல்­கி­றார்கள் என்று நான் ஏன் பதவி விலக வேண்டும். நான் ரணிலின் முக­வரும் அல்ல. மைத்­தி­ரியின் முக­வரும் அல்ல.  அவர்கள் வரச்­சொல்லும் போது வரவும் போகச் சொல்­லும்­போது போகவும் நாங்கள் ஒன்றும் அவர்­களின் அடி­யாட்கள் அல்ல.

இன்று அடி­மைப்­பட்ட நிலை­யி­லுள்ள மக்­களின் குர­லான எம்மை எந்­த­வொரு கார­ணமும் இல்­லாமல் போகச் செல்­வது தார்­மீ­க­மா­னதா என்று நான் கேட்கிறேன். எமது கட்சி இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது.  அதில் இப்போதைய நிலைமைகள்  குறித்து கட்சி ஆராயும் என்றார்.