ரஷ்யா தலைநகர் மொஸ்கோவில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 79 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்குண்டவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளள.

மொஸ்கோவில் உள்ள செர்சிங்ஸ்க் எனுமிடத்தில் உள்ள இந்த தொழிற்சாலையில் இராணுவத்தின், வெடிபொருள் தயாரிப்பு கூடம் மற்றும் தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. 

இந் நிலையிலேயே நேற்றைய தினம் பெரும் புகைமண்டலத்துடன், வெடிபொருட்கள் உள்ளிட்டவை வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.