(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்கள் தொடர்பில் ஆராய  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட சிறப்புக் குழு அதன் அறிக்கையை எதிர்வரும் 10 ஆம் திகதி  ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.  

கடந்த வாரத்துடன் (மே 31)  குறித்த குழு, சாட்சி விசாரணைகளை நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது, அந்த சாட்சிகளை பகுப்பாய்வு செய்து வருவதாகவும்,  அந் நடவடிக்கை நிறைவடைந்ததும் குறித்த தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழுவின்  உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.