கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில்  ஈடுப்படும் பெண் ஊழியர் ஒருவர் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு கோடியே 15 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து குறித்த பெண் ஊழியர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட நகைகள் கடத்தலுக்கு வைத்திருந்த நகைகளா என்பது பற்றி சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.