எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் கரு பழனியப்பன் நடித்துள்ள ‘கள்ளன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

ஊடகவியலாளரும், எழுத்தாளருமான சந்திரா, இயக்குனர் அமீர் மற்றும் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘கள்ளன்’ படத்தில், கரு பழனியப்பன் கதையின் நாயகனாகவும், அவருடன் நிகிதா, வேல ராமமூர்த்தி, சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிடப்பட்டிருக்கிறது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

1975 மற்றும் 89 களில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தபடத்தின் திரைக்கதை, தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள தேனி மாவட்ட மலைக்கிராம பகுதியில் நடைபெறுவதாக அமைந்திருக்கிறது.

கள்ளன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.