ரயில் விபத்தில் பலியான மாணவிகளின் இறுதிச் சடங்கில் செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர்கள் மீது உறவினர்கள்  அச்சுறுத்தி தாக்கமுயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியான மாணவிகளின் இறுதிச் சடங்கு  பொரளையில் அமைந்துள்ள மலர்ச்சாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதே உறவினர்கள்  ஆத்திரமடைந்து  அச்சுறுத்தி தாக்கமுயன்றுள்ளனர் . இதன் போது ஊடகவியலாளர்களின் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஊடகங்கள் எல்லை மீறி விபத்தில் இறந்த இரு பெண்கள் குறித்து விமர்சித்தமையே  இவ்வாறான சம்பவம் இடம்பெறக் காரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  ஊடகவியலாளர்கள் உறவினர்களின் மனநிலையைக்கருத்திற்கொண்டு எந்த வித  நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யசாரா மற்றும் ஷெரோன் ஆகிய இரு இளம் பெண்களே இவ்விபத்தில் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.