வேர்ஜீனியாவில் 12 பேரை சுட்டுக்கொலை செய்த நபருடன் விசேட படைப்பிரிவொன்றை சேர்ந்தவர்கள் நீண்ட மோதலில் ஈடுபட்டு அவரை கட்டுப்படுத்தியதாலேயே மேலும் பலர் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்டது என அப்பகுதின் பொலிஸ் தலைமையதிகாரி ஜேம்ஸ் செர்வேரா தெரிவித்துள்ளார்.

அதிருப்தியடைந்த தொழிலாளி ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரின் பெயர் டீவைன் கிரடுக் என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் பொது பயன்பாடுகள் திணைக்களத்தில் பொறியியலாளராக பணியாற்றினார் அதிருப்தியடைந்து காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

வேர்ஜீனியா நகரக் கட்டிடத்தில் ஏறிய நபர் அங்கிருந்து பல தளங்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தகவல் கிடைத்ததும் விசேடபடைப்பிரிவை சேர்ந்த நால்வர் அந்த பகுதிக்கு விரைந்தனர் என  செர்வெரோ தெரிவித்துள்ளார்.

அவர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர் துப்பாக்கி பிரயோக சத்தத்தை அடிப்படையாக வைத்து  சந்தேகநபரை கண்டுபிடித்து உடனடியாக அவரை நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்

நீண்டநேரம் மோதல் இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் பலமுறை துப்பாக்கி பிரயோகம் செய்தார் விசேட படைப்பிரிவை சேர்ந்தவர்களும் திருப்பி தாக்கினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒரு உத்தியோகத்தர்  மீது துப்பாக்கி தாக்குதலிற்கு இலக்கானார் ஆனால் அவர் குண்டுதுளைக்காத ஆடையை அணிந்திருந்ததன் காரணமாக காப்பாற்றப்பட்டார் எனவும் செர்வெரோ தெரிவித்துள்ளார்.

நீண்ட மோதலால் ஏற்பட்ட காயம் காரணமாக சந்தேகநபர் கொல்லப்பட்டார் எனவும் செர்வெரோ தெரிவித்துள்ளார்

குறிப்பிட்ட கட்டிடத்தில் பணிபுரியும் எட்வேர்ட் வீடன் என்பவர் மாடிப்படியிலிருந்து யாரே விழுந்துள்ளதை அறிந்து அதனை பார்க்க சென்றதாகவும் அங்கு முகம் முழுக்க இரத்தத்துடன் பெண்ணொருவரை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எனது சகாவொருவர் அடுத்தமாடிக்கு சென்றார் அவர் உடனடியாக கீழே திரும்பி வந்து அங்கு நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுகின்றார்  இங்கிருந்து வெளியேறுங்கள் என தெரிவித்தார் எனவும் வீடன் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு என்ன செய்வது என உடனடியாக தெரியவில்லை,அங்கிருப்பதாக அங்கிருந்து வெளியேறுவதா என்பது எனக்கு தெரியவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பலர் சென்றுகொண்டிருந்த நேரத்திலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என  செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசேட படைப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் அந்த கட்டிடத்தை நோக்கி ஓடியதாகவும் தங்களை உள்ளே செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் தாங்கள் மேசைகளிற்கு கீழே மறைந்திருந்தாக தெரிவித்துள்ளனர்