வெள்ளவத்தை பகுதியில் நீர்த் தடாகத்தில் விழுந்து ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் இருந்த தடாகத்தில் விழுந்தே பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.