இலங்கை அணி நான்கு அல்லது ஐந்து போட்டிகளில்  வெற்றி பெற்றால் அந்த அணி 2019 உலககிண்ண தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெறும் என முன்னாள் தலைவர் மகேலஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்

இலங்கை அணி எப்போதும் குழப்பமிகுந்ததாகவே காணப்பட்டது நாங்கள் விளையாடும் காலத்திலும் குழப்பமான நிலையே காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து ஒரே வீரர்கள் விளையாடும் அணியாக இலங்கை ஒருபோதும் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்

அணி வீரர்களை போட்டிகளில் கவனம் செலுத்தச்செய்வதற்காக  நாங்கள் பல்வேறு வழிமுறைகளை கையாளவேண்டியிருந்தது இந்த அணியும் அதனை செய்யவேண்டியிருக்கும் எனவும் மகேலஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனக்கு இந்த அணியில் நம்பிக்கையுள்ளது, போட்டியை வென்று கொடுக்க கூடிய வீரர்கள் உள்ளனர், நான்கைந்து போட்டிகளில் வெற்றிபெற்றால் நீங்கள் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய பலவீனம் சுழற்;பந்து வீச்சாளர்களே என மகேலஜெயவர்த்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

நீங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக வியைளாட விரும்பினால் கடந்த நான்கைந்து வருடங்களில் உங்களிற்காக விளையாடிய வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டும்,என தெரிவித்துள்ள மகேல ஜெயவர்த்தன உள்ளுர் போட்டியின் பின்னர் தெரிவுக்குழுவினர் அனுபவமுள்ள வீரர்கள் சிலரை நீக்கிவிட்டு வேறு சிலரை சேர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களை பொறுத்தவரை இது கடினமான விடயம் அவர்கள் கடந்த சில வருடங்களாக நிரந்தர வீரர்களாக காணப்பட்டனர்,எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த வீரர்களால் பயனில்லை புதிதாக எதையாவது முயற்சிப்போம் என தெரிவுக்குழுவினர் சிந்தித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் இவர்களிற்காக கவலைப்படுகின்றேன் எனவும் தெரிவித்துள்ள அவர் தற்போதைய வீரர்களை விடவேகமாக பந்து வீசக்கூடிய லகிரு குமார அல்லது சமீரவை அணியில் இணைத்திருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவினர் லக்மல் மற்றும் பிரதீப்பை தெரிவு செய்துள்ளனர் அவர்கள் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் ஆனால் காலநிலை வேகப்பந்துவீச்சாளர்களிற்கு சாதகமாக காணப்பட்டால் அவர்கள்  சிறப்பாக விளையாடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தந்திரோபாயம் சற்று வித்தியாசமானது ஆனால் பலன் அளிக்ககூடியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சே கேள்விக்குறிய விடயமாக காணப்படுகின்றது, ஜீவன் மென்டிஸ் அல்லது வன்டர்சேயினால்  ஆட்டத்தின் நடுப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் விக்கெட்களை வீழ்த்தவும் முடியுமா எனவும் மகேல ஜெயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.