ஜோதிகா நடிக்கும் ராட்சசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ஜாக்பாட் ஆகிய படத்தைத் தொடர்ந்து திருமதி ஜோதிகா, அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் ‘ராட்சசி’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், ஹரிஷ் பராடி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் இன்று வெளியானது.

இந்தப் படத்தில் அரசு பாடசாலை ஒன்றில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியராக கீதாராணி என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார்.இதில் அவர் மாணவ மாணவிகளுக்கு கணிதப் பாடத்துடன் கண்ணியம், கட்டுப்பாடு, கம்பீரம் , கடமை உள்ளிட்டபலவற்றையும் கற்பிப்பதாக தெரிகிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவர்கள் ஜோதிகாவின் கதாபாத்திரத்தை எண்ணி வியப்புடன், இது ஆசிரியைகளுக்கும், மாணவர்களுக்கும், ஏனைய ஆசிரிய சமுதாயத்திற்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று தற்போது கருத்துகளை பதிவிடுகிறார்கள்.

‘ராட்சசி’ படத்தின் முன்னோட்டம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஏராளமான லைக்குகளைப் பெற்று இணையத்தில் பெரிய வரவேற்பினை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.