“பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் “

Published By: Daya

01 Jun, 2019 | 02:31 PM
image

பேனா முனையில் ஊடகப் பணியாற்றிய ஊடகவியலாளர்களை படுகொலை செய்த சிங்கள பேரினவாதம் அதற்கான நியாயத்தினை பெற்றுத்தர வேண்டும் என சட்டத்தரணி கே.சுகாஸ் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை திறந்த வெளி மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள  ஊடவியலாளர்களின் நினைவுத்தூபியில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதான சுடரேற்றி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளரும் தேசியத் தலைவரால் நாட்டுப்பற்றாளர் என கெளரவிக்கப்பட்ட  ஐயாத்துரை நடேசன்  பேனா முனையில் ஊடகப் பணியாற்றியபோது சிங்களபேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டார். இன்று படுகொலை செய்யப்பட்டு  15 ஆம் ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அதற்கான நியாயம் இன்னும் கிடைக்கவில்லை.

இது இவர் விடயத்தில் மட்டுமல்ல. நிமலராஜன், தராக்கி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் படுகொலை விடயங்களிலும் நீதியான விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்படாது மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதற்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பெருமளவிலான ஊடவியலாளர்களம் கலந்து கொண்டு, ஊடக பணியின் நிமித்தம் உயிர் நீத்த  அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஈகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-07 05:59:03
news-image

போக்குவரத்து, கல்வி, சுகாதாரத் துறைகளில் உள்நாட்டு...

2026-09-07 05:36:31
news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33