(எம்.எப்.எம்.பஸீர்)

தெளிவான உளவுத் தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோர் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஐவருக்கு மேற்பட்ட பூரண நீதியர்சர்கள் குழு முன்னிலையில் ஆராயுமாறு சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றில் இன்று கோரிக்கை முன்வைத்தார்.

சட்ட மா அதிபர் சார்பில் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜமீல் இதனை உயர் நீதிமன்றில் முன் வைத்தார்.

இதனையடுத்து சட்ட மா அதிபரின் குறித்த கோரிக்கையை பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரியவுக்கு  அனுப்பி வைப்பதாக அறிவித்த நீதியர்சர்கள்,  குறித்த வழக்கை மீள எதிர்வரும் 6 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.