அம்பாறை அக்கரைப்பற்று பிரேதசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த ஆலையடிவேம்பு தீவுக்காலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை இன்று காலையில் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24 ம் திகதி அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் ஆலயத்திற்கு அருகாமையில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் போது வாச்சிக்குடாவைச் சேர்ந்த ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாளால் வெட்டியவர்கள் ஓடித்தப்பி தலைமறைவாகி இருந்தனர். 

இதனையடுத்து, குறித்த சம்பவத்தில் வாளால் வெட்டிய 7 பேர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையில் இருவரை கைது செய்தனர். இதில் தலைமறைவாகியிருந்த ஏனைய 5 பேரை இன்று காலை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட அனைவரும் 20 தொடக்கம் 23 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவார்.