(ஆர்.விதுஷா)

நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலைக்கு 400 மில்லியன்  ரூபாவை அரசாங்கத்தினூடாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன பெற்றுக்கொடுத்தமை பாரிய  மோசடியாகும். இந்த குற்றச்சாட்டுதொடர்பில்  அமைச்சர் ராஜித  சேனாரத்ன கைது செய்யப்பட்டு  விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்  என்று அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கம்  கோரிக்கை  விடுத்துள்ளது.

அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின்  தலைமையகத்தில்  இன்று இடம் பெற்ற  ஊடகசந்திப்பின் போது  அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித்த  லுத்கே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.