நாணயக் கொள்கையை மீளாய்வு செய்தது இலங்கை மத்திய வங்கி 

Published By: Vishnu

31 May, 2019 | 03:47 PM
image

(என்.ஜீ.இராதா கிருஷ்னண்)

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கையை மீளாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராச்சி திணைக்களம் இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கம் 3 நாணயக் கொள்கை மீளாய்வு அறிக்கைகயை வெளியிட்டது .

இதன்படி கொள்கை வட்டி வீதங்கள் 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்ட அதேவேளை நியதி ஒதுக்கு விகிதம் தற்போதய மட்டத்தில் பேணப்படும் . துணை நிலை வைப்பு வசதி விகிதம் 7. 50 சதவீதமாகவும் , துணை நிலை கடண்வழங்கல் வசதி விகிதம் 8. 5 சதவீதமாகவும் நியதி ஒதுக்கு விகிதம் 5.00 சதவிகிதமாகவும் பேணப்படும். நாணயக் கொள்கையை தளர்வுடன் அனுகு முறை ஒன்று உலகலாவிய ரீதியில் அவதானிக்கப்படுகின்றது. 

குறைந்தளவிலான பொருளாதார வளர்ச்சி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலினால் மேலும் பாதிப்படைய கூடும் போல் தோன்றுகின்றது. பணவீக்கத்தில் தற்காலிகமாக ஒரு உயர்வு காணப்பட்ட போதும் பணவீக்க தோற்றப்பாட்டுக்கான அச்சுறுத்தல் எதுவும் நடுத்தர காலத்தில் எதிர்பார்க்கப்படவில்லை பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் ஆதரவுடன் பணவீக்கம் 2019 இல் விரும்பத்தக்க மட்டமாக 4 - 6 வீச்சில் தொடர்ந்தும் காணப்படும் போல் தோன்றுகிறது. 

2019 மாரச்சில் வர்த்தக பற்றாக்குறை 2018 மார்ச்சின் அமெரிக்க டொலர் 871 மில்லியனிலிருந்து 592 மில்லியனாக சுறுக்கமடைந்தது. வர்த்தக பற்றாக்குறை கடுமையாக சுறுக்கமடைந்தமைக்கு ஏற்றுமதிகளில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சியும் வாகனங்களில் இறக்குமதியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியும் காரணங்களாக அமைந்தன. 

2019 ஏப்ரலில் உள்ளாச பயணிகளின் வருகையின் வருவாய்கள் வீழ்ச்சி அடைந்த அதேவேளை வெளிநாட்டில் இலங்கை  தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் சிறிதளவு அதிகரிப்பு காணப்பட்டது. இவ் ஆண்டின.  இதுவரையான காலப்பகுதியில் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிராக 3. 6 சதவீதமென ஒன்று சேர்ந்த உயர்வொன்றினை பதிவு செய்திருந்தது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56