களனி பல்கலைக்கழகம் தற்காலிக நேற்று மூடப்பட்ட நிலையில் ஜூன் மாதம்  3 ஆம் திகதி ஓரு சில பீடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் விஞ்ஞானம் ,வணிக முகாமைத்துவம் மற்றும் தகவல்  தொழில்நுட்ப பீடங்கள் மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று  களனி பல்லைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் மீள் அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.