வடக்கு மாகா­ணத்தில் கடந்த சில நாட்­க­ளாக வன்­மு­றைகள் அதி கரித்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. கிளி­நொச்சி, மாங்­குளம் உட்­பட பல பகு­தி­க­ளிலும் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் தாக்­குதல் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. இதனால் மீண்டும் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் மக்கள் மத்­தியில் அச் சமான நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. 

கிளி­நொச்­சியில் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற வாள் வெட்டுத் தாக்­கு­தலில் கர்ப்­பிணிப் பெண் உட்­பட ஒன்­பது பேர் காய­ம­டைந்­துள்­ளனர். கிளி­நொச்சி செல்வா நகர்ப் பகு­தியில் இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில் ஆறு பெண்­களும் மூன்று ஆண்­க­ளு­மாக ஒன்­பதுபேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்­கிள்கள் என்­ப­வற்றில் முக 

த்தை கறுப்புத் துணி­க­ளினால் மூடி­ய­வாறு வந்த 15 க்கும் மேற்­பட்ட வர்கள் வீடு­க­ளுக்குள் புகுந்து இந்தத் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். 

ஒரு மோட்டார் சைக்கிள் அடித்துச் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் எரி­யூட்­டப்­பட்­டுள்­ளது. இத­னை­விட தற் காலிக வீடு ஒன்றும் எரிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வீடு­களில் உட­மைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­ப­வத்தை அடுத்து கிளி­நொச்சி செல்­வா­நகர் பகு­தியில் நேற்று முன்­தினம் பெரும் பதற்றம் நில­வி­யது. இதே­போன்று மாங்­குளம் பகு­தியில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு வீடு புகுந்து கும்­ப­லொன்று தாக்­குதல் நடத்­தி­யதில் பெண்கள் உட்­பட ஐந்து பேர் காய­ம­டைந்­துள்­ளனர். 

மாங்­குளம் புதிய கொல­னி­யி­லுள்ள வீடு ஒன்­றுக்குள் வாள், கைக்­கத்தி, கம்பி, பொல்­லு­க­ளுடன் உட்­பி­ர­வே­சித்த கும்பல் வீட்­டிலிருந்­த­வர்­களை சர­மா­ரி­யாகத் தாக்­கி­யுள்­ளது. தாக்­குதல் நடத்­திய இந்தக் குழு­வினர் வீட்­டி­லி­ருந்த சில பெறு­ம­தி­யான உட­மை­க­ளையும் திருடிச் சென்­றுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. 

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்­னரும் தென்­ம­­ராட்சிப் பகு­தியில் வாள்கள் மற்றும் பொல்­லு­க­ளுடன் வந்த குழு­வொன்று வீடு­க­ளுக்குள் புகுந்து தாக்­குதல் நடத்­தி­யி­ருக்­கி­றது. இந்தச் சம்­ப­வத்­திலும் பலர் 

படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர். இவ்­வாறு வடக்கில் வன்­முறைச் சம்­பவங் கள் மற்றும் கொள்ளைச் சம்­ப­வங்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. 

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம் 

பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து நாட்டில் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­காலச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் படை­யினர் மற்றும் பொலி­ஸா­ரி­னது சோத­னை­களும் தேடுதல் நட­வ­டிக்­கை­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய இஸ்­லா­மிய தீவி­ர­வாத அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான சஹ்­ரானின் செயற்­பா­டுகள் தொடர்பில் விசா­ர­ணையில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன் அவ­ருடன் நெருங்கிச் செயற்­பட்­ட­வர்கள் பெரு­ம­ள­வானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கிழக்கில் காத்­தான்­கு­டியை மையப்­ப­டுத்தி இந்த தீவி­ர­வா­தி­களின் செயற்­பாடு அமைந்­தி­ருந்த போதிலும் கிழக்கு மாகா­ணத்தை விடவும் வடக்கு மாகா­ணத்­தி­லேயே சோதனைக் கெடு பிடிகள் அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. 

நாட்டில் எங்கும் இல்­லா­த­வாறு வடக்­கிற்குச் செல்லும் வாக­னங்­களும் அங்­கி­ருந்து தென் பகுதி நோக்கி வரும் பஸ்கள் உட்­பட சகல வாக­னங்­களும் படை­யி­னரின் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கி­றது. பெரு­ம­ள­வான சோதனைச் சாவ­டிகள் அமைக்­கப்­பட்டு சோதனை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. 

இவ்­வாறு வடக்கில் பாது­காப்பு கெடு­பி­டிகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் பட்­டப்ப­கலில் வாள்­வெட்டுத் தாக்குதல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதுவும் குழுக்­க­ளாக வாக­னங்­களில் வரு­கை­தந்து வீடுகளுக்குள் புகுந்து தாக்­குதல் நடத்தி வருகின் றனர். 

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதை யடுத்து வடக்கில் திட்­ட­மிட்ட வகையில் போதை­வஸ்துக் கலா­சா­ரமும் வன்­முறைக் கலா­சா­ரமும் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. தமிழ் இளைஞர், யுவ­தி­களின் உணர்வு களை மழுங்­க­டிக்கும் வகையில் இத்­த­கைய செயற்­பா­டுகள் கடந்த அர­சாங்க காலத்தில் திட்­ட­மிட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது. அந்தக் காலப்­ப­கு­தியில் வடக்கு கிழக்கில் கிரீஸ் மனி­தர்கள் நட­மா­டி­னார்கள். இதனால் மக்கள் மத்­தியில் பெரும் அச்­ச­மான நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. 

இதனைத் தொடர்ந்து ஆவா குழு உட்­பட பல குழுக்கள் உரு­வெ­டுத்­தன. அந்தக் குழுக்கள் வாள் வெட்டுத் தாக்­கு­தல்­க­ளிலும் கொலை, கொள்ளை நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. ஆவாக் குழுவின் செயற்­பாட்­டினால் பெரும் அச்­சு­றுத்­த­லான நிலைமை வடக்கில் காணப்­பட்­டது. இந்த குழுக்­களின் பின்­னணி தொடர்­பிலும் பல்­வேறு சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன. வீடு­களில் மக்கள் இரவில் தூங்க முடி­யாத நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. வீடு­க­ளுக்குள் புகுந்து கொள்­ளைகள் இடம்­பெற்­றன. ஆனைக்­கோட்­டையில் கூரையைப் பிரித்து வீட்­டுக்குள் இறங்­கிய ஆயுதம் தரித்­த­வர்கள் வயோ­திப மாது ஒரு­வரை அவ­ரது கண­வனை கட்டி வைத்­து­விட்டு பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­துடன் வீட்டில் இருந்த பெறு­ம­தி­யான பொருட்­க­ளையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றி­ருந்­தனர். 

இத்­த­கைய வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­ட­போது அன்­றைய யாழ்.மாவட்ட கட்­டளைத் தள­பதி இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அதி­காரம் வழங்­கப்­ப­டு­மானால் சில மணி நேரத்­துக்குள் இத்­த­கைய வன்­மு­றை­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடியும் என்று தெரி­வித்­தி­ருந்தார். அன்­றைய காலப்­ப­கு­தியில் அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்டு சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கையில் பொலிஸார் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதனைச் சுட்­டிக்­காட்டும் வகை­யி­லேயே கட்­டளைத் தள­ப­தியின் கருத்து அமைந்­தி­ருந்­தது. 

ஆவா குழு உட்­பட வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட போதிலும் அந்த முயற்சி பூர­ண­மாக வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. ஆனால் கடந்த சில மாதங்­க­ளாக குடா­நாட்­டிலும் வடக்கு பகு­தி­யிலும் வன்­முறைக் கலா­சாரம் ஓர­ள­வுக்கு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அண்­மையில் இட­மாற்றம் பெற்றுச் சென்ற வட­மா­கா­ணத்­துக்­கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த விடயம் தொடர்பில் மகிழ்ச்சி தெரி­வித்­தி­ருந்தார். வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் மற்றும் வன்­முறைச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்ட இளை­ஞர்கள் தமது தவ­று­களை உணர்ந்து திருந்தி வாழ்­வ­தாக அவர் பெரு­மிதம் தெரி­வித்­தி­ருந்தார். 

ஆனால் தற்­போது தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் மீண்டும் வடக்கில் வன்­முறைக் கலா­சாரம் அதி­க­ரிப்­பது என்­பது பெரும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. தற்­போது அவ­ச­ர­காலச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தினர் உட்­பட முப்­ப­டை­யி­ன­ருக்கு எவ­ரையும் எந்த வேளை­யிலும் கைது செய்­வ­தற்­கான அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

இவ்­வா­றான நிலையில் வடக்கில் வன்­முறைக் கலா­சாரம் அதி­க­ரித்­துள்­ள­மையும் அதனை படை­யினர் மற்றும் பொலிஸார் தடுக்க முடி­யா­துள்­ள­மையும் ஏன் என்ற கேள்­வியை எழுப்­பு­கின்­றது. தமக்கு அதி­காரம் தந்தால் சில மணி நேரங்­களில் வன்­முறைக் கலா­சா­ரத்தை ஒழிக்க முடியும் என்று கூறிய இரா­ணு­வத்­தினர் தற்­போது அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுக்­கா­தது ஏன் என்று பாதிக்­கப்­பட்ட மக்கள் கேள்வி எழுப்பும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. 

நாட்டில் வன்­முறைக் கலா­சாரம் எந்த வடி­வத்தில் வந்­தாலும் அதற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. அது தீவி­ர­வாத ரூபத்தில் வந்தால் என்ன வாள்­வெட்டுக் குழுக்­களின் ரூபத்தில் வந்தால் என்ன அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். இந்த விட­யத்தில் பொலி­ஸாரும் படைத்­த­ரப்­பி­னரும் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து நாட்டில் தொடர்ச்­சி­யான சுற்­றி­வ­ளைப்­புக்­களும் தேடு­தல்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இதன்­போது வாள்கள் உட்­பட பல்­வேறு ஆயு­தங்கள் மற்றும் வெடி மருந்­துகள் என்­ப­னவும் கைப்­பற்­றப்­பட்டு வருகின்றன. வடக்கிலும் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் அதனையும் மீறி வன்முறைக் கலாசாரம் வடக்கில் தலைதூக்கியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி வருகின்றது. 

வாள்வெட்டு கலாசாரத்தின் இத்தகைய வன்முறைகளையும் தடுக்க முடியாத படைத்தரப்பினர் எவ்வாறு தீவிரவாதிகளின் தாக்குதலை தடுப்பார்கள் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகின்றது. எனவே வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் சட்டம் 

ஒழுங்கு அமைச்சும் ஜனாதிபதியின் வசமே உள்ளது. எனவே இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தீவிர 

அக்கறை செலுத்துவதுடன் வன்முறைக் கலாசாரத்தை கட்டுப் படுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.