அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிற்கு முக்கிய காரணமான அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதியை வடகொரியா சுட்டுக்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் பின்னர் இவர் கொல்லப்பட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கு இவரே காரணம் என குற்றம்சாட்டினை முன்வைத்து வடகொரியா அரசாங்கம் இவரை கொலை செய்துள்ளது.

தோல்வியில் முடிவடைந்த டிரம்ப் -கிம் சந்திப்பினை ஏற்பாடு செய்த அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதி கிம்சொல்லும் வெளிவிவகாரஅமைச்சின்  அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

விசேட பிரதிநிதிக்கு முதல் கடுழீய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் கொள்கைகள் தொடர்பான பாடம் புகட்டப்பட்டது என தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

 இதன் பின்னர் விசேட பிரதிநிதியும்  வெளிவிவகார அமைச்சை சேர்ந்த நான்கு அதிகாரிகளும்  மிரிம் விமானநிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்   என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்காக வேவுபார்த்தனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டது எனவும் தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

விசேட பிரதிநிதியுடன்  இணைந்து செயற்பட்ட மற்றொரு அதிகாரி சிறைக்கு அனுப்பபட்டுள்ளார்.