அமெ­ரிக்க  வெள்ளை  மாளி­கைக்கு அரு­கி­லுள்ள  எலிப்ஸ் பூங்காவில்  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  தனக்குத் தானே தீ வைத்துக் கொணடு தீப்­பந்­த­மாக எரிந்த  நபரால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

தீ வைத்துக் கொண்ட குறிப்­பிட்ட நபர்   உடலில் பர­விய தீயுடன் அந்தப் பூங்­காவில் நடந்து சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் அங்கு வந்த  இர­க­சிய சேவை உத்­தி­யோ­கத்­தர்கள்  தீய­ணைப்புக் கரு­வியைப் பயன்­ப­டுத்தி அவ­ரது உடலில்  பர­விய தீயை அணைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.

குறிப்­பிட்ட நபர் தீயி­லி­ருந்து பாது­காப்பை வழங்கும் ஆடையை அணிந்­தி­ருந்த போதும் அவ­ரது உடலின் 85  சத­வீ­த­மான  பகு­தியில் எரி­கா­யங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த சம்­ப­வத்­தின்போது அந்­ந­ப­ருக்கு அரு­கி­லி­ருந்த   சந்­தே­கத்­துக்­கி­ட­மான பொதியொன்றும் தீப்­பற்றி எரிந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ள  அந்நபரது உடல் நலம் கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகிறது.