(எம்.ஆர்.எம்.வஸீம்)

ரிஷாத் பதி­யு­தீனை சட்­டத்­துக்கு முன்­நி­றுத்­தினால் அவ­ருடன் இருக்கும் ஐந்­து­பேரும் அந்த கட்­சியில் இருந்து வெளி­யே­று­வார்கள். அதனால் ஆட்சி தொடர்பில் சிந்­திக்­காமல் பிர­தமர் ரிஷாத்தை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­த­வேண்டும். அத்­துடன் அவ­ருக்கு எதி­ராக தெரி­விக்­கப்­பட்­டு­வரும் குற்­றச்­சாட்­டுக்கள் தற்­போது ஒப்­பு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பினர் எஸ்.பி. திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி  கேந்­திர நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,அடிப்­ப­டை­வா­திகள் மற்றும் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் அமைச்சர் ரிஷாத் தொடர்­பு­களை பேணி­வந்­தி­ருப்­ப­துடன் அவர்­க­ளுக்கு உத­வி­க­ளையும் செய்து வந்­தி­ருக்­கின்றார். இது­தொ­டர்­பான பல விட­யங்கள் தற்­போது வெளிப்­பட்­டுள்­ள­துடன் அவை ஒப்­பு­விக்­கப்­பட்டும் வரு­கின்­றன. அதனால் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பிர­தமர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுத்தால் அவரும் அவ­ருடன் இருக்கும் 5 உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­றி­வி­டு­வார்கள்  என்ற அச்­சத்­திலே தெரி­வுக்­குழு அமைத்து அவரை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது

ஆனால் ரிஷாத் பதி­யு­தீனை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினால் அவ­ருடன் இருக்கும் 5 பேரில் 4 பேர்  அவ­ரை­விட்டு விலகி தனித்து கட்­சியை கொண்­டு­செல்­லவே முயற்­சித்து வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அதனால் பிர­தமர் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வேண்டும்.

 ரிஷாத் பதி­யுதீன் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுடன் வியா­பார ரீதியில் கொடுக்­கல்­வாங்­கல்­களை வைத்­துக்­கொண்­டுள்­ள­துடன் வெளி­நா­டு­களில் இருந்து நிதியை பெற்­றுக்­கொண்டு இங்கு அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு தேவை­யான பள்­ளி­வா­சல்­களை அமைத்­துள்ளார். 

அவற்றில் பாரி­ய­ளவில் நிதி மோச­டி­க­ளையும் செய்­தி­ருக்­கின்றார். இது­தொ­டர்­பாக லஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்ய இருக்­கின்றோம். அதே­போன்று அவரின் அமைச்­சுக்கு கீழ் இருக்கும் ச.தொ.ச நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான வாக­னங்கள் நாட்டில் அடிப்­ப­டை­வா­திகள் தங்கி இருந்த இடங்­க­ளுக்கு வந்­துபோய் இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.
 குரு­ணாகல்  வைத்­தி­ய­சாலை மகப்­பேற்று வைத்­தி­ய­ருக்கு எதி­ராக தாய்­மார்கள் முறைப்­பாடு செய்­து­வ­ரு­கின்­றனர். குறித்த வைத்­தியர் அமைச்சர் ரிஷாத்­துடன் தொடர்­பு­டை­யவர். அதனால் அடிப்­ப­டை­வா­தி­களின் நோக்­க­மாக இருந்­தது, இந்த நாட்டில் முஸ்லிம் அல்­லா­த­வர்­களை இல்­லா­ம­லாக்­கு­வ­தாகும். அந்­த­வ­கையில் வைத்­தியர் தொடர்­பாக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மை­யாக இருக்­கலாம். 

அதே­போன்று ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு தொலைக்­காட்சி சேவை ஒன்றும் இருக்­கின்­றது. அந்த தொலைக்­காட்சி நிறுவனத்துக்கு ஒரு மாதத்துக்கு பல இலட்சம் ரூபாவுக்கு விளம்பரங்களை வழங்குமாறு ச.தொ.ச உட்பட அவரின் அமைச்சுக்கு கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கு வற்புறுத்தி இருக்கின்றார். அதனால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவருக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து உண்மை நிலையை கண்டறியவேண்டும் என்றார்.