பாடம் படிக்காத சிறுவனை புல் உண்ண வைத்த அவலம் - ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

Published By: Daya

31 May, 2019 | 09:32 AM
image

பாகிஸ்தான் பாடசாலையில் பாடம் படிக்காத சிறுவனை புல் உண்ண வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு ஆரம்ப பாடசாலையில் ஹமீத் ராசா ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, கஸ்கான் (வயது 7) என்கிற சிறுவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறினார். ஆனால் சிறுவன் பாடத்தை படிக்காமல் நின்றுகொண்டிருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி சிறுவனை உண்ண வைத்துள்ளார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், சிறுவனின் பெற்றோர், ஆசிரியர் தங்களது உறவுக்காரர் என்றும், இதை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறிவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரம் மாவட்ட பொலிஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் பொலிஸார் ஹமீத் ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47