இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நண்பகல் புதுடில்லி நகரை சென்றடைந்தார்.

புதுடில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அவர் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ உள்ளிட்ட தூதரக பணிக்குழாமினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டரபதி பவனில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள பதவிப்பிரமாண வைபவத்தில் ஏனைய வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் பங்குபற்றவுள்ளார்.