சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேன்முறையீடு மீதான விசாரணை மே 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பு வாக்குரைஞர் சேகர் நாபே மே 3ஆம் திகதி தனது வாதத்தை தொடர்ந்து முன் வைப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.