மன்னார் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவரும் ரி.சரவணராஜா உடன் அமுலுக்கு வரும்  வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை மன்னார் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கிளிநொச்சி நீதிமன்ற நீதபதி மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடமாற்றத்திற்கான அவசர கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால்    இன்று வியாழக்கிழமை தொலைநகல் மூலம்   அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.