மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தில் சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களையும் அதன் சாரிகள் இருவரையும் வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தபோது  உழவு இயந்திரங்களில் மண் ஏற்றிச் சென்ற போது அதனைச் சோதனையிட முற்படுகையில் அதில் வந்த மூவர் தப்பியோடிவிட்டதாகவும் இவ்விரு வாகனங்களிலிருந்தும் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனங்கள் இரண்டையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களையும் வாகனங்களையும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.