ட்ரண்டாகி வரும் நேசமணி மீம்ஸ் பற்றி பிரபல திரைப்பட நடிகரான வடிவேலு கூறியதாவது, தனது மாமியார் இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டதாகவும், நான் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதிலும் இப்போது நடிகர் வடிவேலுவின் நேசமணி மீம்ஸ் ட்ரண்டாகி வருகிறது. இந்நிலையில் அவரிடம் இது குறித்து பிரபல தமிழ் அலைவரிசையொன்று கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும், இதைப் பற்றி தனக்கு ஒன்று தெரியாது எனவும், அப்படி எதுவும் நடந்திருந்தால், இது எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் தான், என்னுடைய மாமியார் இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டதற்கான ஆறுதலாகவும் இருக்குமென தெரிவித்துள்ளார். என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.