2019 உலக கிண்ணப்போட்டிகளில்  நாங்கள் தோற்கும் நிலையும் ஏற்படலாம் என இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்

உலக கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவை இன்று எதிர்கொள்ளவுள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

நாங்கள் உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடும் அணிகளிடம் தோற்கலாம்,நாங்கள் மிக மோசமான தோல்வியை தழுவி பின்னர் அதிலிருந்து மீள எழவேண்டியிருக்கும் என மோர்கன் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் காணப்படுவது நல்ல விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கும் பழகவேண்டும் உல கிண்ணப்போட்டிகள் எங்களை கடுமையாக சோதனை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

150 ஓட்டங்கள் என்ற இலக்கை நாங்கள் துரத்தும்வேளை விக்கெட்களை நாங்கள் இழக்கும் நிலையேற்படலாம் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி குறித்த எதிர்பார்ப்புகள் எதிர்பாராத அளவை அடைந்துள்ளன எனமோர்கன் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்,மக்கள் மத்தியில் பலத்த நம்பிக்கை காணப்படுகின்றது,அவர்கள் உலக கிண்ணப்போட்டிகளை காண்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன்  உள்ளனர் எனவும் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஒரு அணியாக நாங்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம் சிறப்பாக விளையாடும் எண்ணத்துடன் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.