கைத்தொழில் வணிய வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்டிருந்தார்.  

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் தொழில் பயிற்சி நிலைய மண்டபத்தில் கைத்தொழில் உற்பத்தியாளர்களுடனான விசேக கலந்துரையாடல் மற்றம் குறைகளை அறிந்து கொள்ளும் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார். 

கிளிநாச்சி மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். இதேவேளை இவர்களிற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

சுயதொழில் ஈடுபடுவோருக்கான ஓய்வு ஊதியம் என்பது பெரும் சவாலாக உள்ளது. இவர்களுக்கான ஓய்வு ஊதியம் வழங்கும் முன்னர் முதல் கட்டமாக காப்புறுதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவ்வருடத்திற்குள் காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் இதன்போது கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு தெரிவித்தார்.