கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் கர்ப்பினிப் பெண் உட்பட 10 பேர் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  ஐந்து சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.இதனபோது வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரு வாள்கள், கூரிய ஆயுதங்களும் சில, கெப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வரும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.