இப்போதைய 'பவர் ப்ளே' என்பதற்கான இலக்கணம் வரையறுக்கப்பட்டது இந்த உலகக்கோப்பையில்தான். முதல் 15 ஓவர்களில் 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள்தான் நிற்க வேண்டும் என்பது விதி.
முழுக்க முழுக்க களத்தடுப்புக்கு சார்ந்த விதியாகவே இருந்தது. அது துடுப்பாட்ட வீரர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று பாடம் எடுத்தது இலங்கையின் தொடக்க ஜோடியான சனத் ஜயசூரிய மற்றும் ரொமெஷ் களுவிதாரன.
இந்த இருவரும் கிரிக்கெட்டில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினர். பெரும்பாலான களத்தடுப்பாளர்கள், 30 யார்ட் வட்டுத்துக்குள் இருக்க, பந்துகளைப் பறக்கவிடத் தொடங்கினார்கள் சனத்தும் களுவும்.
அப்போதெல்லாம், மற்ற அணிகளின் தொடக்க ஜோடிகள் நிதானமாகவே ஆடுவார்கள். 1992 உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்தின் மார்ட்டின் குரோவ்தான், முதல் பத்து ஓவர்களில் அடித்து ஆட வேண்டும் என்பதற்காக, பவர்ஹிட்டர்களை தொடக்க ஜோடிகளாக இறக்கியதாகச் சொல்வார்கள்.
ஆனால், அந்த விதியை மாற்றி 1996 உலகக் கிண்ணத் தொடரில் நிறைவேற்றிக் காட்டியது சனத் –- களுவிதரன தொடக்க ஜோடி.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட் விழுந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள். அந்த மரபை உடைத்து, 15 ஓவர்களில் ஓட்டங்களை வாரிக்குவித்தது இலங்கை.
இப்படி அதிரடி இந்த ஜேழடி, இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், முதல் 15 ஓவர்களில் 117 ஓட்டங்கள். கென்யாவுக்கு எதிராக 123 ஓட்டங்கள், இங்கிலாந்துடன் காலிறுதியில் 121,மீண்டும் இந்தியாவுடனான அரையிறுதியில் 86 ஓட்டங்கள் என அப்போதே இருபதுக்கு 20 ஆட்டத்தைக் காட்டினார்கள். விக்கெட்டைப் பற்றி அவர்கள் இருவரும் கவலைப்படவேயில்லை. சொல்லப்போனால், பல போட்டிகளில் சீக்கிரமே வெளியேறினார்கள்.
ஆனால், அவர்கள் அமைத்துக்கொடுத்த தொடக்கத்தை, அடுத்து வந்த அரவிந்த் டி சில்வா போன்ற வீரர்கள் நன்றாகப் பயன்படுத் திக்கொண்டனர். ஒருநாள் போட்டியின் ஆட்ட முறையில் நடந்த மிகப்பெரிய மாற்றத் துக்கான விதை சனத் மற்றும் கலு ஜோடி விதைத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM