பூகொடை  மண்டாவலை பகுதியில் அமைந்துள்ள பொலிதீன் உற்பத்தி நிறுவனமொன்றில் நேற்று தீடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கம்பஹா தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயிணை கட்டுப்படுத்தியதாக பொலியார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ ஏற்பட்டதன் காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் ,அதனால்  ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இது வரை கணிப்பிடப்படவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.